மோடி_நிகழ்த்திய_பொருளாதாரப்_பேரழிவு–3

கீழ்மட்டச் சந்தை திவால்…

ஜப்பானிலிருந்து நாடு திரும்பிவிட்டார் மோடி. அவர் செய்துவிட்டுப் போன பேரழிவில் மக்களின் கூக்குரல் தம் காதுகளுக்கு எட்டும் தூரத்தில் அவர் இல்லை. அதனால் ஜப்பானில் அவர் என்ன செய்தார் என்பதை மக்கள் கண்டுக் கொள்ளவே இல்லை. அதுதான் அவருக்குத் தேவை. ஏனெனில் உலகம் முழுதும் அணு ஆற்றலுக்கு எதிரான போர்க் குரல்கள் ஒலித்துக் கொண்டிருக்கும் போது மோடி போன்ற கார்ப்ரேட் அனுதாபிகள் அணு ஆற்றல் முகவர்களாக மாறி செயல்பட்டுக் கொண்டிருகிறார்கள். அமெரிக்கா, ஆஸ்ட்ரேலியா, ரஷ்யா, ஜப்பான் ஆகிய நாடுகளோடு மோடி மேற்கொண்டிருக்கும் அணு ஆற்றல் ஒப்பந்தங்கள் 50லட்சம் கோடி அமெரிக்க டாலருக்கு மேல் இருக்கும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. நீண்டகால அடிப்படையில் நிகழும் இந்தப் பணிக்களுக்கான பணம் இந்தியர்களின் தலையில் சுமத்தப்படும். மேலும் அதன் மூலம் இந்திய அதிகார வர்க்கத்திற்கு கிடைக்கும் கமிஷன் தொகையினை முடிந்தால் கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள். இதுதான் ஊழலை ஒழிப்பவரின் லட்சணம். இவற்றில் வரும் தொகைகள் எங்கே போய் முடங்கும் என்பது பொருளாதாரப் புலிகளுக்கு வெளிச்சம். Continue reading

Advertisements

வரலாற்றின் வாய்ப்பு

 
sanna-thiruma.jpg
  – கௌதம சன்னா
             1995 வாக்கில் எனக்கிருந்த இடதுசாரி மற்றும் அம்பேத்கரியத் தாக்கத்தினால் மெட்ராஸ் சேரிப் பகுதிகளில் அமைப்புகளை உருவாக்குவதிலும், தலித் சமூக-அரசியல் வரலாற்றுத் தரவுகளை ஆவணப்படுத்தும் முயற்சியிலும் அலைந்துக் கொண்டிருந்த நேரத்தில் அங்கொன்றொம் இங்கொன்றுமாக தலித் பேந்தர் என்ற வேகமிகு அமைப்பு இயங்கி வருவதைப் பற்றி பேசப்படுவதைக் கேட்பதுண்டு, போகப்போக 1996ஆம் ஆண்டுகளின் தொடக்கதில் அது கொஞ்சம் அதிகமாகவே கேட்கத் தொடங்கியிருந்தது.

குச்சிக் கொளுத்தி வைத்தியர் டாக்டர்.ஈடிபஸ் என்றான கதை,

கொஞ்சம் ஆச்சரியமாகக்கூட இருக்கலாம். இந்த         தலைப்பை மட்டிப் பயல்களெல்லாம் புரிந்துக்கொள்ள முடியாது என்பதால் 

oedibus 2விளக்கமாகத்தானே பார்க்க முடியும். கிரேக்கத் துன்பியல் நாடகத்தில் மிக முக்கியமான கதை ஈடிபஸ் ரெக்ஸ் என்ற நாடகம், அந்த நாடகம் பின்வருமாரு விரிகிறது.

தீப்ஸ் என்ற நாட்டிற்கு லயஸ் என்பவன் அரசனாக இருந்தான். அவனுக்கு ஜொகாஸ்ட்டா என்பவள் மனைவியாக, அரசியாக இருந்தாள். இவளது வயிற்றில் தனது கணவன் மூலம் ஒரு குழந்தை உண்டானது. அந்த குழந்தை எப்படி இருக்கும் என்று கோவிலில் உள்ள ஆரக்கிள் என்ற தெய்வத்திடம் கேட்டபோது அந்த தெய்வம் “ பிறக்கப்போகும் குழந்தை ஈடிபஸ் ரெக்ஸ் என பெயர்பெறும், அது தன் தந்தையை கொன்றுவிடும், அதிகாரத்தைக் கைப்பற்றி பின்பு தன்னுடைய தாயை மணந்துக் கொள்ளும்” என்று ஆருடம் கூறியது. அதனால் பயந்துப்போன நாட்டு மக்கள் குழந்தைப் பிறந்த உடனேயே அதை நாடு கடத்தி விடுகின்றனர். நாட்டை விட்டுப்போனக் குழந்தை ஈடிபஸ் என்ற பெயரோடு வளர்ந்து பெரியவனாகி அலைந்து திரிகிறது. தரிகெட்டுத் திரிந்த ஈடிபஸ் ஆரகிள் தெய்வத்திடம் போய் தனது விதியைக் கேட்கிறான் அது உண்மையை சொல்லி விடுகிறது. Continue reading