மோடி_நிகழ்த்திய_பொருளாதாரப்_பேரழிவு–3

கீழ்மட்டச் சந்தை திவால்…

ஜப்பானிலிருந்து நாடு திரும்பிவிட்டார் மோடி. அவர் செய்துவிட்டுப் போன பேரழிவில் மக்களின் கூக்குரல் தம் காதுகளுக்கு எட்டும் தூரத்தில் அவர் இல்லை. அதனால் ஜப்பானில் அவர் என்ன செய்தார் என்பதை மக்கள் கண்டுக் கொள்ளவே இல்லை. அதுதான் அவருக்குத் தேவை. ஏனெனில் உலகம் முழுதும் அணு ஆற்றலுக்கு எதிரான போர்க் குரல்கள் ஒலித்துக் கொண்டிருக்கும் போது மோடி போன்ற கார்ப்ரேட் அனுதாபிகள் அணு ஆற்றல் முகவர்களாக மாறி செயல்பட்டுக் கொண்டிருகிறார்கள். அமெரிக்கா, ஆஸ்ட்ரேலியா, ரஷ்யா, ஜப்பான் ஆகிய நாடுகளோடு மோடி மேற்கொண்டிருக்கும் அணு ஆற்றல் ஒப்பந்தங்கள் 50லட்சம் கோடி அமெரிக்க டாலருக்கு மேல் இருக்கும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. நீண்டகால அடிப்படையில் நிகழும் இந்தப் பணிக்களுக்கான பணம் இந்தியர்களின் தலையில் சுமத்தப்படும். மேலும் அதன் மூலம் இந்திய அதிகார வர்க்கத்திற்கு கிடைக்கும் கமிஷன் தொகையினை முடிந்தால் கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள். இதுதான் ஊழலை ஒழிப்பவரின் லட்சணம். இவற்றில் வரும் தொகைகள் எங்கே போய் முடங்கும் என்பது பொருளாதாரப் புலிகளுக்கு வெளிச்சம். Continue reading

Advertisements

சேரி சாதி தீண்டாமை – 9

சேரிகளின் தோற்றம் பற்றின அம்பேத்கரின் கோட்பாடு எழுப்பும் இடைவெளிகள்..

– கௌதம சன்னா

சேரிகள் உருவாக்கம் பற்றின் அம்பேத்கரிகளின் — கருத்துகள் அடிப்படையான ஒரு தளத்தை உருவாக்கிக் கொடுத்துள்ளன. என்றாலும் நம் காலத்தில் அவரது கருத்துகளைப் புரிந்துக் கொள்வதில் உள்ள இடர்பாடுகளைக் கண்க்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் முக்கியமானது சேரி என்கிற சொல்லாட்சி. தற்காலத்திய புரிதலுக்காக மட்டுமே அந்த வார்த்தை இங்கே பயன்படுத்தப்பட்டுள்ளது. அம்பேத்கர் இரண்டு விதமாகப் பயன்படுத்துகிறார். 1. கிராமத்திற்கு வெளியே உள்ள குடியிறுப்பு ஷிமீஜீணீக்ஷீணீtமீ ஷிமீttறீமீனீமீஸீts 2. ஒதுக்கப்பட்ட தனிக் குடியிறுப்பு நிலீமீttஷீ, இந்த இரண்டு சொற்களும் தமிழக்த்திற்கு புதிதானவை. ஆனால் சேரி என்ற பொருளில் நெடுங்காலம் நிலவி வருபவை. தமிழைப் பொறுத்தவரையில் சேரி என்பது பொதுச் சொல், அது குறிப்பிட்ட சாதிக்கானதும் அல்ல.. எனவே தீண்டத்தகாதவர்கள் என ஒதுக்கப்பட்டவர்கள் வசிக்கும் குடியிறுப்பையும் சாதி இந்துக்கள் வசிக்கும் குடியிறுப்புகளையும் ஒப்பு நோக்கியே பார்த்துக் கொண்டிருக்கிறோம். இனி அம்பேத்கரின் ஆய்வில் உள்ள இணக்கங்களையும் இடைவெளிகளையும் வரிசைப்படுத்திக் கொள்வோம். Continue reading

சேரி.. சாதி.. தீண்டாமை… – 4

துணைக் கண்டத்தின் படைப்புத் தொண்மங்கள்

1
இதுவரை உலகின் பல பாகங்களில் நிலவிக் கொண்டிருக்கும் உலகம் மற்றும் மனித படைப்புக் கதைகளைப் பார்த்தோம், இந்தியாவில் அவை எப்படி இருந்தன, இருந்துக் கொண்டிருக்கின்றன என்கிற கேள்வி இயல்பாகவே வாசகர்களுக்கு எழலாம், பல வாசகர்கள் அதை என்னிடம் கேட்டார்கள். சாதி என்பது மனித இனம் படைக்கப்பட்ட காலம் முதல் இருக்கிறது என்று நம்புகிறவர்கள் இன்னும் இருக்கிறார்கள், அவர்களுக்கு எப்படி பதில் சொல்ல முடியும் என்கிற ஆதங்கத்திலிருந்து எழுவதுதான் அந்த கேள்வி. ஆகவே சாதியின் புதிர்களை இந்தியத் தொண்மங்களிலிருந்து பெறவேண்டுமானால் தமிழ் மற்றும் சமஸ்கிருத இலக்கியங்கள் மட்டுமே ஆதாரங்களாய் இருக்கின்றன. ஏனெனில் இவை மட்டுமே மிகப்பழமையானவை. எனவே இலக்கியங்களிலிருந்துத் தொடங்க வேண்டும் என்பது நிலைத்து நிற்கிற ஒரு வரலாற்று விதி.. அந்த விதியை இப்போது பின் தொடர்வோம்…K8936

இந்தியாவில் வடமொழி இலக்கியங்கள் இந்து மதத்தின் அடிப்படைகளை தாங்கி நிற்கின்றன என்பது ஏற்கெனவே ஏற்றக்கொள்ளப்பட்ட ஒன்று, என்றாலும் அவற்றில் ஒரு படைப்புக் கதையினை மட்டும் நாம் பார்க்க முடியாது, பல கதைகள் அவற்றில் இருக்கின்றன, மட்டுமின்றி அவை உண்மையானவை என்றும் நம்பப்படுகின்றன. இந்நிலையில் அதை எங்கிருந்து தொடங்குவது என்பது என்கிற வரையறையை நாம் வகுத்துக்கொண்டால் விடை பெறுவது எளிது. எல்லாவற்றிகுமான விடைகளை நான்கு வேதங்களும் தருகின்றன என்று தொடர்ந்து இந்துக்கள் சொல்லி வருகிறார்கள் அல்லவா..! அந்த வேதங்களின் முதன்மையான ரிக் வேதம் மனிதன் படைப்பை எப்படி காட்சிப் படுத்துகிறது என்பதிலிருந்துத் தொடங்கினால் பொருத்தமாக இருக்கும். (பின்வரும் மேற்கோளை டாக்டர்.அம்பேத்கர் எழுதிய சூத்திரர்கள் யார் என்கிற நூலின் முதல் அத்தியாயத்திலிருந்து எடுத்தாளப்பட்டது) Continue reading