மத மாற்ற தடை சட்டம் – வரலாறும் விளைவுகளும் – நூல் அறிமுகம்

என்ற நூல் தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மதமாற்ற தடை சட்டத்தை அடிப்படையாக கொண்டு எழுதப் பட்டாலும், அந்த சட்டம் கொண்டு வரப் படுவதற்கு முன்பே கருணாநிதி அவர்களின் ஆட்சியில் போடப்பட்ட தலித்துகளுக்கு எதிரான ஒரு ஆணை தன மிக அடிப்படியானது என்பதை மிக விரிவாக  ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட நூல் இது. அது மட்டுமின்றி மத மாற்றம் தொடர்பாக இது வரை வெளியிடப்பட்ட அனைத்து வரலாற்று பின்னணிகளையும் ஆவணங்களையும் அரசமைப்பு சட்டப் பின்னணிகளையும் விரிவாக ஆய்வு செய்த நூல் இது

மருதா வெளியீடு
ஆண்டு- 2006
விலை ரூபாய் .60
Advertisements

கீழ்வெண்மணியின் குரல்?

‘டாக்டர் கிருஷ்ணசாமியும், திருமாவளவனும் சாதிக் கலவரத்தைத் தூண்டுகிறார்கள்; தமிழகத்தைக் கலவர பூமியாக மாற்றுகிறார்கள்’ என்று கருணாநிதி, ஜெயலலிதா, ராமதாஸ் உட்பட சாதி இந்து அரசியல்வாதிகள், போலிஸ் மற்றும் சாதியப் பத்திரிகைகள் தொடர்ச்சியாக செய்து வரும் பிரச்சாரம் இது. ஆனால், சாதியையும் தீண்டாமையையும் ஒழிக்கப் போராடும் மக்களின் பிரதிநிதிகளை கலவரக்காரர்களாக சித்தரிக்கும் ஆளும் வர்க்க கருத்தை மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியினர் பரப்புவதன் மூலம், அவர்கள் எந்த வர்க்கத்தின் பக்கம் நிற்கிறார்கள்? சாதி இந்துக்களின் பக்கம் நிற்பதால்தான் தலித் தலைவர்களைத் தடுக்க – எந்தத் தயக்கமும் இல்லாமல் போலிசின் உதவியை நாடியிருக்கிறார்கள் போலும்!

ஒருவேளை காரல்மார்க்ஸ் உயிரோடிருந்தால் இப்படிச் சொல்லியிருப்பார் : “உங்கள் எதிரி யாரென சொல்லுங்கள்,நீங்கள் யாரென தலித்துகள் தெரிந்து கொள்வார்கள்” –

http://keetru.com/index.php?option=com_content&view=article&id=19516:-2002&catid=1464:2012&Itemid=705

 

 

 

பிறப்புரிமையை மறுக்கும் திராவிடக் கட்சிகள்

மத மாற்ற தடை சட்டம் வரலாறும் விளைவுகளும் – நூல் அறிமுகம் 

-அய்.இளங்கோவன்

———————————–

‘‘மதமாற்றம், தலித் அரசியலில் பிரிக்க முடியாத அம்சம். ஏனெனில், இந்து மதத்தினரால் வேறெவரையும்விட கடுமையாகப் பழிவாங்கப்பட்டவர்கள் தலித்துகள். அதனால் தங்களின் மத உணர்வுகளை, தேர்வு சுதந்திரத்தைத் தம் சமூக விடுதலையோடு தொடர்புபடுத்திக் காண்கின்றனர். இந்த அம்சத்தில் குறுக்கீடு வரும்போது – அவர்கள் பதில் சொல்லாமலோ, அந்த விவாதத்தில் கலந்து கொள்ளாமலோ, ஒதுங்கி இருக்க முடியாது. குறிப்பாக, மதமாற்றத் தடைச்சட்டம் தலித்துகளைக் குறிவைத்து வரும்போது, தலித்துகள் அமைதியாக இருப்பது சாத்தியமில்லை” (‘மதமாற்றத் தடைச் சட்டம்’ நூல், பக்கம் : 90).

மதமாற்றமே சாதியை ஒழித்து, தலித் மக்களுடைய ஆற்றலின் தோற்றுவாயாக இருக்கும் என்பது அம்பேத்கரின் தீர்மானமான முடிவு. ஆனால், இதற்கு சவால் விடும் வகையில் திராவிட அரசியல் கட்சிகள், இருபத்தோறாம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டிலும் (2000), அதனைத் தொடர்ந்து 2002 ஆம் ஆண்டிலும், ஒன்றையொன்று விஞ்சும் வகையில் பிரகடனப்படுத்திய – இருவேறு துரோக ஆவணங்களை, ‘மதமாற்றத் தடைச் சட்டம் – வரலாறும் விளைவுகளும்’ என்ற தமது நூலில் அலசுகிறார் கவுதம சன்னா. இவ்விரு ஆவணங்களும் (1. அரசு நிலைக் கடிதம் ஆதிதிராவிடர் நலத்துறை எண்.81, நாள் 19.9.2000; 2. கட்டாய மதமாற்றத் தடைச்சட்டம் – 2002), தலித்துகளைக் குறிவைத்து வந்தவை. இவை குறித்து தலித்துகள் எதிர்வினையாற்ற வேண்டும் என்பதன் வெளிப்பாடே இந்நூல். Continue reading