சாதி தீண்டாமையின் மூலவரலாறு – 2

மனித பிறப்பெடுத்த தொண்மங்கள்

உலகில் மனிதன் எவ்வாறு படைக்கப்பட்டான் என்பதைப் பற்றி தெரிந்துக் கொள்ள வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே மனித குலத்திற்கு ஆர்வம் இருந்திருக்கிறது. அதற்கான தேடலை அவர்களை பலவாறாக முன்னெடுத்திருக்கிறார்கள். அறிவியல் அடிப்படையில் யோசிக்க முடியாமல், ஏதோ ஒரு சக்திதான் இவ்வாறெல்லாம் செய்திருக்க முடியும் என்று நம்பியவர்கள் பல கதைகளை உருவாக்கினார்கள். அவை கால இட மாறுபாடுகளோடு உலகம் முழுதும் உள்ளன. ஒவ்வொரு காலத்திற்கு ஒரு கதையும், இட வேறுபாட்டிற்கு ஏற்ப வேறு கதைகளும் உள்ளன. அந்த வகையில் நம் நாட்டில்கூட மனிதப் படைப்புகளைப் பற்றிய தொண்மக் பல கதைகள் உள்ளன. அவை சாதி பற்றின புரிதலை உண்டாக்க அவசியமானவை. Continue reading

Advertisements

சவுத் ஏசியனிஸ்ட் (இங்கிலாந்து) இதழில் கௌதம சன்னாவின் பேட்டி

                                                            தமிழகத்தின் தலித் சமூக அரசியல் வரலாறு தொடர்பான விரிவான interaction with corring publishedவிவாத அடிப்படையிலான உரையாடல்

இங்கிலாந்து நாட்டினைச் சேர்ந்த. எடின்பர்க் பல்கலையைச் சேர்ந்த பேராசிரியர் டாக்டர்.யூகோ கொரிஞ்ச் அவர்கள் தலித் அரசியல் தொடர்பாகவும், அதில் விடுதலைச் சிறுத்தைகளின் பங்களிப்பு தொடர்பாகவும் மேற்கொண்ட விரிவான ஆய்வுகளின் அடிப்படையில் அமைந்த உரையாடல் இது. எடின்பர்க் பல்கலையின் தெற்காசிய ஆய்வு மையம் வெளியிட்டுவரும் சவுத் ஏசியனிஸ்ட் இதழில் இந்த பேட்டி சிறப்பு வெளியீடாக வெளியிடப்பட்டுள்ளது.தலித் அரசியலை கூர்ந்து நோக்குவோருக்கும், தம்மை களப்போராளிகளாக முன்னிருத்திக் கொள்வோருக்கும் பயன்படும் என்று நம்புகிறோம்.

கௌதம சன்னாவின் பேட்டியினைக் காண இங்கே சொடுக்கவும்

http://journals.ed.ac.uk/southasianist/article/view/147

கூடங்குளம் மக்கள் போராட்ட ஆதரவுக் கருத்தரங்கம். சென்னை

கூடங்குளம் போராட்டத்துக்கு அமெரிக்காவில் இருந்து பணம் வருகிறதா? /தினகரன் செய்தி

Saturday 2012-02-25

சென்னை : சென்னை பாரிமுனை தம்புசெட்டி தெருவில் உள்ள எஸ்பிஓ அலுவலகத்தில், ‘கூடங்குளம் அணு உலையை மக்கள் ஏன் எதிர்க்கிறார்கள்’ என்ற தலைப்பில் நேற்று கருத்தரங்கம் நடந்தது. வக்கீல் கவுதம சன்னா தலைமை வகித்தார். வக்கீல் ரஜினி காந்த் வரவேற்றார். கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கி ணைப்பாளர் சுப.உதயகு மார் பேசியதாவது: Continue reading