மலேசியப் பயணத்தில்.. தமிழ் பௌத்தம் – கருத்துரையின் மீது காட்டப்பட்ட கோபமும் காட்டமும்.

16507038_1031666010310186_1354276499_nஎதிர்பாராத விதமாக முன்கூட்டியே கிளம்ப வேண்டிய அவசரம் வந்தது என் மலேசிய பயணத்திற்கு, அதற்குக் காரணம் மலாயா பல்கலைக்கழகம் மொழியியல்துறை, சர்வதேச தமிழ்மரபு அறக்கட்டளை, ஓம்ஸ் அறவாரியம், தமிழ் மலர் நாளிதழ் ஆகியன இணைந்து நடத்தும் கருத்தரங்கில் ஒரு கருத்தாளராக கலந்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் உருவானதினால்தான். எனவே 20.01.2017 அன்று இரவு 11 மணி விமானத்தைப் பிடித்து மலேசியா போய் இறங்கும்போது காலை 6 மணி. அதாவது நம் நேரப்படி அதிகாலை 2 மணி. அங்கிருந்து மலாயா பல்கலைக்கழக வளாகத்தை சென்றடையும்போது அங்கு காலை 9.30 மணி. குறித்த நேரத்தில் கருத்தரங்கம் தொடங்கியபோது காலை 10 மணி. நம் நேரம் காலை 5.30 மணி. Continue reading

Advertisements

சாதி, தீண்டாமையின் மூல வரலாறு – part 1

Young_Ambedkarந்தியா எனும் நாடு விடுதலை அடைந்து 67 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்து 125ஆம் ஆண்டில் நாம் நுழைந்துவிட்டோம். காலங்கள் மாறிவிட்டதைப் போன்ற தோற்றம் உருவாகியிருந்தாலும் அது நிசமாகி இருக்கிறதா? நகரங்களில் எங்கு பார்த்தாலும் மாட மாளிகைகள். மாபெரும் நிறுவனங்கள், விண்ணைத் தொடும் கட்டடங்கள், உலகத்தை கைகளில் தவழவிடும் தொழில் நுட்பங்கள், உலகத்தின் எந்த முனையிலிருந்தும் யாரிடமும் தொடர்புகொள்ளவைக்கும் வாய்ப்புகள். எதுவும் மறைந்திருக்க முடியாது, யாரும் மறைக்கவும் முடியாது என எத்தனையோ வளர்ச்சிகள். உலகம் கற்பனைக்கு எட்டாத அளவில் மாறிவிட்டது. மாற்றம் விடாமல் தொடரும். Continue reading

தற்கால தமிழ் எழுத்துரு மாற்றத்தின் மூலவர்…

Thamizhmann May-2014 - Copy

 

 

 

 

பண்டிதர் அயோத்திதாசர்… தமிழ்மண் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு கட்டுரை.

சா.கௌதம சன்னா.

குறிப்பு கட்டுரையின் முதல் பக்கத்தின் இரண்டாம் வரிசையின் கீழே •எ வின் நெடிலுக்கு  எ என்றுதான் அன்றைக்கு எழுதினார்• , இதன் பொருள் என்ற நெடில் எழுத்தின் மீது புள்ளி வைத்து எழுதினார்கள் என்று மாற்றி படிக்க வேண்டும், அதேபோல நெடிலுக்கும் என்று இல்லாமல் வின் மீது புள்ளி வைத்து எழுதினார்கள். இந்த சிறு சேர்ப்புகள் அச்சில் வரவில்லை எனவே இக்குறிப்பை அடிப்படையாக வைத்துப் படிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

முழு கட்டுரைக்கு  சொடுக்குங்கள்..–  34 to 39 Pages