பிழைத்தவன் பிழைப்பு…

பிறப்பது ஒரு வேலையா
இறப்பது ஒரு வேலையா
வாழ்வதுதான் ஒரு வேலையா
வேலையாய் மாறின பிறகு
வேலை மட்டும்தானே வாழ்வு! Continue reading

Advertisements

வெண்மணி – வீரவணக்கம்

சீறியக் கள்ளத் துவக்குகளின் குண்டுகள்
துரத்திவந்த சாதிவெறிக் குண்டர்கள்
வேடிக்கைப் பார்த்த கையாலாகா காவலர்கள்..

அரைபடி நெல்லை கூலியாய் கேட்டதற்கு
மரணத்தை அளந்து த்தர
அடியாள் பட்டாளத்தை ஏவியக் குருரம்..

வர்க்கமும் சாதியும் இணைந்துக் தாக்கிய வன்மம்.
ஆயுதம் அற்ற கைகளை போருக்கு அனுப்பிய வீரம்
எல்லாம் சேர்ந்தன கீழ்வெண்மணிச் சேரியில்..

ரோமக் கொடியோர் பூட்டியத் தளையை
சுமந்து தவித்த யூதக் குலத்தினை மீட்க
உதித்த மைந்தன் பிறந்த நாளில்

மீட்க வகையற்ற வேதனைகள் சூழ
மீறும் தீ நாவுகள் பற்ற வெந்து மடிந்தனர்
மண்ணின் மைந்தர்கள் மானம் காத்து..

வெண்மணி சாம்பலில்
உயிர்த்து வாழும் வீரர்களுக்கு
வீர வணக்கம்

/ சன்னா/25.12.2012

படைப்புகள்

சோதனைப் பதிவு