கொரிய ஆதி அரசி ஒரு பௌத்த தமிழ்ப்பெண்

பேராசிரியர் நா கண்ணன் எழுதிய 

கொரியாவின் தமிழ்ராணி எனும் நூலுக்கான மதிப்பாய்வுரை 

இந்தியாவின் வரலாறு என்பதே அடிமை மனநிலையின் வெளிப்பாடு என்கிற ஐயம் எனக்கு நீண்ட காலமாகவே உண்டு. இந்திய மரபில் வரலாற்றை எழுதுதல் என்கிற முறை கிடையாது. மாறாக வரலாற்றினைப் புனைதல் மட்டுமே நீண்ட காலமாக நிலவி வரும் ஒரு முறை. இதில் மாற்றத்தை முதன் முதலில் உருவாக்கியவர்கள் வைதீக மரபுகளுக்கு எதிராக தோன்றியவர்கள். குறிப்பாக பௌத்தர்கள் மற்றும் சமணர்கள். நாளடைவில் இவற்றிலும் புனைவாக்கம் என்பது உள்வாங்கப்பட்டது என்பது வேறு. பிறகு, முகலாயர்கள் காலத்தில் வரலாற்றினைப் பதிவு செய்யும் பழக்கம் உருவானதுதான் மத்தியக்கால போக்கு. அதற்குப் பிறகு ஆங்கிலேயர்கள், டச்சுக்காரர்கள், இத்தாலியர்கள், போர்ச்சுக்கீசியர்கள், ஜெர்மானியர்கள் உள்ளிட்ட மேற்கத்திய முன்னோடிகள் இந்திய வரலாற்றினை எழுதும் வாய்ப்பை உருவாக்கினார்கள். இந்தியாவைப் புரிந்துக் கொள்ளும் நோக்கில் அவர்கள் பார்வையில் எழுதப்பட்ட இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு காலப்போக்கில் நவீன இந்திய வரலாற்றின் ஒரு வழக்கமாகவும் பழக்கமாகவும் மாறிவிட்டது. இதன் பலன் என்னவென்றால் இந்தியத் துணைக்கண்டத்தின் மீது அதிகாரம் செலுத்தியவர்கள் பார்வையில் பார்க்கு­­ம் ஒரு அதிகாரத்துவ வரலாற்று பதிவு உருவானதும், அந்தப் பார்வைக்கு இந்தியப் படிப்பாளிகளும் பலியானதுதான். இது இந்தியாவிற்கு பெரும் இழப்பு என்பதை அந்த வரலாற்று ஆய்வாளர்கள் புரிந்து கொள்ளவே இல்லை என்றால் அது மிகையாகாது. Continue reading

Advertisements

மலேசியப் பயணத்தில்.. தமிழ் பௌத்தம் – கருத்துரையின் மீது காட்டப்பட்ட கோபமும் காட்டமும்.

16507038_1031666010310186_1354276499_nஎதிர்பாராத விதமாக முன்கூட்டியே கிளம்ப வேண்டிய அவசரம் வந்தது என் மலேசிய பயணத்திற்கு, அதற்குக் காரணம் மலாயா பல்கலைக்கழகம் மொழியியல்துறை, சர்வதேச தமிழ்மரபு அறக்கட்டளை, ஓம்ஸ் அறவாரியம், தமிழ் மலர் நாளிதழ் ஆகியன இணைந்து நடத்தும் கருத்தரங்கில் ஒரு கருத்தாளராக கலந்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் உருவானதினால்தான். எனவே 20.01.2017 அன்று இரவு 11 மணி விமானத்தைப் பிடித்து மலேசியா போய் இறங்கும்போது காலை 6 மணி. அதாவது நம் நேரப்படி அதிகாலை 2 மணி. அங்கிருந்து மலாயா பல்கலைக்கழக வளாகத்தை சென்றடையும்போது அங்கு காலை 9.30 மணி. குறித்த நேரத்தில் கருத்தரங்கம் தொடங்கியபோது காலை 10 மணி. நம் நேரம் காலை 5.30 மணி. Continue reading

மனு ஸ்மிருதி குறித்து.. டாக்டர் ராஜம் அவர்களுடன்..

rajam-and-sannaராஜம்: அன்புள்ள திரு சன்னா, வணக்கம். எனக்குள்ள சில ஐயங்களுக்கும்  கேள்விகளுக்கு நீங்கள்தான் துல்லியமான விடையளிப்பீர்கள் என்று நம்புகிறேன்.   நான் தமிழகத்தில் இருந்தவரை (1975) ‘தலித்’ என்ற சொல்லைக் கேள்விப்பட்டதில்லை. இந்தச்சொல்லின் பொருள் என்ன? இது எப்போது ஏன் தமிழகத்தில் புகுந்தது?

Continue reading