மனு ஸ்மிருதி குறித்து.. டாக்டர் ராஜம் அவர்களுடன்..

rajam-and-sannaராஜம்: அன்புள்ள திரு சன்னா, வணக்கம். எனக்குள்ள சில ஐயங்களுக்கும்  கேள்விகளுக்கு நீங்கள்தான் துல்லியமான விடையளிப்பீர்கள் என்று நம்புகிறேன்.   நான் தமிழகத்தில் இருந்தவரை (1975) ‘தலித்’ என்ற சொல்லைக் கேள்விப்பட்டதில்லை. இந்தச்சொல்லின் பொருள் என்ன? இது எப்போது ஏன் தமிழகத்தில் புகுந்தது?

Continue reading

Advertisements

சாதி தீண்டாமையின் மூலவரலாறு – 2

மனித பிறப்பெடுத்த தொண்மங்கள்

உலகில் மனிதன் எவ்வாறு படைக்கப்பட்டான் என்பதைப் பற்றி தெரிந்துக் கொள்ள வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே மனித குலத்திற்கு ஆர்வம் இருந்திருக்கிறது. அதற்கான தேடலை அவர்களை பலவாறாக முன்னெடுத்திருக்கிறார்கள். அறிவியல் அடிப்படையில் யோசிக்க முடியாமல், ஏதோ ஒரு சக்திதான் இவ்வாறெல்லாம் செய்திருக்க முடியும் என்று நம்பியவர்கள் பல கதைகளை உருவாக்கினார்கள். அவை கால இட மாறுபாடுகளோடு உலகம் முழுதும் உள்ளன. ஒவ்வொரு காலத்திற்கு ஒரு கதையும், இட வேறுபாட்டிற்கு ஏற்ப வேறு கதைகளும் உள்ளன. அந்த வகையில் நம் நாட்டில்கூட மனிதப் படைப்புகளைப் பற்றிய தொண்மக் பல கதைகள் உள்ளன. அவை சாதி பற்றின புரிதலை உண்டாக்க அவசியமானவை. Continue reading

சாதி, தீண்டாமையின் மூல வரலாறு – part 1

Young_Ambedkarந்தியா எனும் நாடு விடுதலை அடைந்து 67 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்து 125ஆம் ஆண்டில் நாம் நுழைந்துவிட்டோம். காலங்கள் மாறிவிட்டதைப் போன்ற தோற்றம் உருவாகியிருந்தாலும் அது நிசமாகி இருக்கிறதா? நகரங்களில் எங்கு பார்த்தாலும் மாட மாளிகைகள். மாபெரும் நிறுவனங்கள், விண்ணைத் தொடும் கட்டடங்கள், உலகத்தை கைகளில் தவழவிடும் தொழில் நுட்பங்கள், உலகத்தின் எந்த முனையிலிருந்தும் யாரிடமும் தொடர்புகொள்ளவைக்கும் வாய்ப்புகள். எதுவும் மறைந்திருக்க முடியாது, யாரும் மறைக்கவும் முடியாது என எத்தனையோ வளர்ச்சிகள். உலகம் கற்பனைக்கு எட்டாத அளவில் மாறிவிட்டது. மாற்றம் விடாமல் தொடரும். Continue reading