மோடி_நிகழ்த்திய_பொருளாதாரப்_பேரழிவு–3

கீழ்மட்டச் சந்தை திவால்…

ஜப்பானிலிருந்து நாடு திரும்பிவிட்டார் மோடி. அவர் செய்துவிட்டுப் போன பேரழிவில் மக்களின் கூக்குரல் தம் காதுகளுக்கு எட்டும் தூரத்தில் அவர் இல்லை. அதனால் ஜப்பானில் அவர் என்ன செய்தார் என்பதை மக்கள் கண்டுக் கொள்ளவே இல்லை. அதுதான் அவருக்குத் தேவை. ஏனெனில் உலகம் முழுதும் அணு ஆற்றலுக்கு எதிரான போர்க் குரல்கள் ஒலித்துக் கொண்டிருக்கும் போது மோடி போன்ற கார்ப்ரேட் அனுதாபிகள் அணு ஆற்றல் முகவர்களாக மாறி செயல்பட்டுக் கொண்டிருகிறார்கள். அமெரிக்கா, ஆஸ்ட்ரேலியா, ரஷ்யா, ஜப்பான் ஆகிய நாடுகளோடு மோடி மேற்கொண்டிருக்கும் அணு ஆற்றல் ஒப்பந்தங்கள் 50லட்சம் கோடி அமெரிக்க டாலருக்கு மேல் இருக்கும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. நீண்டகால அடிப்படையில் நிகழும் இந்தப் பணிக்களுக்கான பணம் இந்தியர்களின் தலையில் சுமத்தப்படும். மேலும் அதன் மூலம் இந்திய அதிகார வர்க்கத்திற்கு கிடைக்கும் கமிஷன் தொகையினை முடிந்தால் கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள். இதுதான் ஊழலை ஒழிப்பவரின் லட்சணம். இவற்றில் வரும் தொகைகள் எங்கே போய் முடங்கும் என்பது பொருளாதாரப் புலிகளுக்கு வெளிச்சம். Continue reading

Advertisements

சாதி, தீண்டாமையின் மூல வரலாறு – part 1

Young_Ambedkarந்தியா எனும் நாடு விடுதலை அடைந்து 67 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்து 125ஆம் ஆண்டில் நாம் நுழைந்துவிட்டோம். காலங்கள் மாறிவிட்டதைப் போன்ற தோற்றம் உருவாகியிருந்தாலும் அது நிசமாகி இருக்கிறதா? நகரங்களில் எங்கு பார்த்தாலும் மாட மாளிகைகள். மாபெரும் நிறுவனங்கள், விண்ணைத் தொடும் கட்டடங்கள், உலகத்தை கைகளில் தவழவிடும் தொழில் நுட்பங்கள், உலகத்தின் எந்த முனையிலிருந்தும் யாரிடமும் தொடர்புகொள்ளவைக்கும் வாய்ப்புகள். எதுவும் மறைந்திருக்க முடியாது, யாரும் மறைக்கவும் முடியாது என எத்தனையோ வளர்ச்சிகள். உலகம் கற்பனைக்கு எட்டாத அளவில் மாறிவிட்டது. மாற்றம் விடாமல் தொடரும். Continue reading

நம்மாழ்வாருக்கு வீரவணக்கம்

homage to Nammazhvaar

homage to Nammazhvaar

வேளாண் அறிவியலாளர் நம்மாழ்வார் இன்று நம்மோடு இல்லை என்பது வருத்தத்திற்குரியது. பரந்துப்பட்ட அளவில் இயற்கை வேளாண்மைக் குறித்த விழிப்புணர்வை அவர் உருவாக்கினார். அவரது சில கருத்துக்களோடு சமூகப் பார்வையின் அடிப்படையில் முரண்பாடுகள் இருந்தாலும் சமரசமின்றி தனது இறுதி காலம் வரை வாழ்ந்தார் என்பது மட்டுமல்ல வாழும் தலைமுறைக்கும் வருங்காலத் தலைமுறைக்கும் ஏராளமான எச்சரிக்கைகளை அவர் விட்டுச் சென்றுள்ளார்.

இயற்கை பற்றி மட்டுமல்ல மனித வாழ்வின் உன்னதங்களை இயற்கையை வெல்லும் பேராசையில் மனிதர்கள் சீரழித்ததின் மூலம் மீட்கமுடியாத அபாயத்தை அவர்கள் கட்டமைத்திருக்கிறார்கள் என்பதை அவர் சுட்டிக்காட்டினார். ஆனால் அவரின் எச்சரிக்கைகளை பொருட்படுத்தாததின் பதிலீட்டை அவர்கள் விரைவிலேயே பெறுவார்கள் என்பது அச்சமூட்டுகிறது.

ஒரு பெரியவர் இறந்துபோனால் ஒரு நூலகம் புதைக்கப்படுகிறது என்று ஓர் ஆப்பிரிக்க பழமொழி உண்டு அது நம்மாழ்வார் மறைவில் அப்படியே பொருந்தும். நம்மாழ்வாருக்கு எமது வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கௌதம சன்னா
கருத்தியல் பரப்புச் செயலாளர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி