நம்மாழ்வாருக்கு வீரவணக்கம்

homage to Nammazhvaar

homage to Nammazhvaar

வேளாண் அறிவியலாளர் நம்மாழ்வார் இன்று நம்மோடு இல்லை என்பது வருத்தத்திற்குரியது. பரந்துப்பட்ட அளவில் இயற்கை வேளாண்மைக் குறித்த விழிப்புணர்வை அவர் உருவாக்கினார். அவரது சில கருத்துக்களோடு சமூகப் பார்வையின் அடிப்படையில் முரண்பாடுகள் இருந்தாலும் சமரசமின்றி தனது இறுதி காலம் வரை வாழ்ந்தார் என்பது மட்டுமல்ல வாழும் தலைமுறைக்கும் வருங்காலத் தலைமுறைக்கும் ஏராளமான எச்சரிக்கைகளை அவர் விட்டுச் சென்றுள்ளார்.

இயற்கை பற்றி மட்டுமல்ல மனித வாழ்வின் உன்னதங்களை இயற்கையை வெல்லும் பேராசையில் மனிதர்கள் சீரழித்ததின் மூலம் மீட்கமுடியாத அபாயத்தை அவர்கள் கட்டமைத்திருக்கிறார்கள் என்பதை அவர் சுட்டிக்காட்டினார். ஆனால் அவரின் எச்சரிக்கைகளை பொருட்படுத்தாததின் பதிலீட்டை அவர்கள் விரைவிலேயே பெறுவார்கள் என்பது அச்சமூட்டுகிறது.

ஒரு பெரியவர் இறந்துபோனால் ஒரு நூலகம் புதைக்கப்படுகிறது என்று ஓர் ஆப்பிரிக்க பழமொழி உண்டு அது நம்மாழ்வார் மறைவில் அப்படியே பொருந்தும். நம்மாழ்வாருக்கு எமது வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கௌதம சன்னா
கருத்தியல் பரப்புச் செயலாளர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

Advertisements

தமிழீழம் பெற்றுத் தந்த ஜெயலலிதா அம்மையாருக்கு நன்றிகள் கோடி…

கடந்jeya 1த ஒரு வாரத்திற்கு மேலாக மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, அந்த போராட்டத்தை யார் வழி நடத்துவது, யார் அந்த போ  ராட்டத்திற்கு சொந்தம் கொண்டாடுவது என்று நமது தமிழ்த் தேசியவாதிகள் முன்னெடுத்தப் போராட்டம் யாவரும் அறிந்ததே. அந்த அறியாப் பதர்கள் பதட்டமடைந்து எங்கே மாணவர்கள் தம்மை விட்டுப் போய்விடுவார்களோ என்ற பயத்தில் பலவாறாக உளறிக் கொட்டினார்கள்.

Continue reading

டெல்லி முற்றுகை முடிவு பெறட்டும் இந்திய முற்றுகை தொடங்கட்டும்

டெல்லியில் பாலியல் கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த சகோதரிக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒப்பீட்டளவில் இந்தியாவில் உள்ள 53 பெரிய நகரங்களில் தலைநகர் டெல்லியில்தான் அதிகமான பாலியல் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. எனவே தோராயக் கணக்குப்படி நாளொன்றுக்கு சராசரியாக 13 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதாக அந்தப் புள்ளி விவரம் காட்டுகிறது. அதுவும் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையிலேயே இந்த விவரம் பெறப்பட்டுள்ளது, இந்த ஆண்டு டில்லியில் 4,489 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக புள்ளி விவரம் காட்டுகிறது. Continue reading