சேரி.. சாதி.. தீண்டாமை..8

சேரிகளின் தோற்றம்
அம்பேத்கரின் கருத்துக்கள் விரிவான தளத்தில்…
 
கௌதம சன்னா

1
சேரிகள் உருவானதற்கு இன பாகுபாடுகள் காரணமாகவில்லை என்ற முடிவை எட்டியப்பின் நமக்கு இருக்கக்கூடிய ஒரே அடிப்படையான அம்பேத்கரின் அவதானிப்புகளை விரிவாகப் பார்க்க வேண்டும். அப்போதுதான் சேரிகள் உருவாக்கம் இயக்கம் மற்றம் பரவல் குறித்த தெளிவினைப் பெற முடியும். தீண்டத்தகாதவர்கள் யார் அவர்கள் எவ்வாறு தீண்டத்தகாதவர்களாக ஆயினர் (-) என்ற நூலை அம்பேத்கர் 1948 ஆம் ஆண்டு  வெளியிட்டார். இந்திய வரலாற்று ஆய்வியல் வரலாற்றில் முதல்முறையாக கிராமத்திற்கு வெளியே தீண்டத்தகாதவர்களின் குடியிறுப்பும்,. தீண்டாமையும் உருவானதைப் பற்றின ஆய்வை முன்னெடுத்த முதல் புத்தகம் அது. அதற்கு முன்பு இத்துறைப் பற்றி யாரும் பேசவேயில்லை என்பதால் மிக முன்னோடியான நூல் என்பதில் ஐயமில்லை. அதே நேரத்தில் அதற்குப் பிறகும் அத்துறை பெரிதாக வளரவில்லை என்பதும் அதிர்ச்சியளிக்கக்கூடியதாக உள்ளது. இதுவரை தீண்டாமையும் சேரியும் உருவான புதிரை விடுவிக்க யாரும் பெரிதாக அலட்டிக் கொண்டதாகவும் தெரியவில்லை. எனவேதான் மிக முக்கியத்துவம் வாய்ந்த அந்த நூலில் அம்பேத்கரின் கருத்துக்களை அவரின் எழுத்துகளிலேயே பார்த்தால் கூடுதல் தெளிவு பிறக்கும் என நம்புகிறேன்.
Continue reading

Advertisements

குடியரசு நாளை புரட்சியாளர் அம்பேத்கருக்கும் அர்ப்பணிப்போம்

கதிரவன் ஒளி விழும் உலகின் நிலமனைத்தையும் ஒரு குடையின் கீழ் ஆண்ட பிரிட்டிஷ் பேரரசின் முடிவு 1947ஆம் ஆண்டு இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. பிறகு, தனது மாட்சிமையைக் காத்துக் கொள்ளவும் தனக்கென தனித்த அரசமைப்பு அடிப்படையிலான அரசை நிர்மாணித்துக் கொள்ளவும் கடுமையான நிர்பந்தத்தில் துணைக்கண்டம் அப்போது நின்றது. Continue reading

அம்பேத்கர் சிலை அவமதிப்பு காட்டும் அரசியல் திசை

            இன்னும் மன்னர்களின் காலத்தில் வாழ்வதாகத் தான் இப்போது நடக்கும் சமூக நடப்புகளைப் பார்க்கும்போது தோன்றுகிறது. மன்னர்களின் காலம் மலையேறி நீண்டகாலம் ஆகிவிட்டதை இன்னும் இந்திய இடைச்சாதிகள் நம்பவில்லை என்றுத்தான் தெரிகிறது. அந்தக் காலத்தில் மற்ற நாட்டின் மீது படையெடுக்கும் மன்னர் எதிரி நாட்டின் மன்னனின் தலையை கொய்து விட்டால் அது மிகப் பெரிய வீரமாக பேசப்பட்டது. தலையெடுப்பவன் தண்டல்காரனாக மாறிவிடுவான் என்பது சொல்லாமலே விளங்கும். ஆனால் அந்தக் காலம் மீண்டும் வருமா என் பழையக்காலப் பெரியவர்கள் கிராமங்களில் புலம்புவார்களே அப்படி ஒரு பெரு மூச்சை இப்போதெல்லாம் வேறுவேறு குரல்களில் கேட்க முடிகிறது.
      அண்மையில் மைய அரசின் கீழ் இயங்கும் கல்வித்துறையில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மேல்நிலை முதலாமாண்டு பாடப்புத்தகத்தில் அம்பேத் கரை பற்றி வந்தக் கேலிச்சித்திரங்கள் உருவாக்கிய பேரலையினைத் தொடர்ந்து, உத்திரப் பிரதேச மாநிலத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் சிலையும் முன்னாள் முதல்வர் செல்வி.மாயாவதி அவர்களின் சிலையும் சாதி வெறியர்களால் இடித்து அவமதிக்கப்பட்டது. இரண்டு நிகழ்வுகளுக்குமான காரணங்கள் வேறுவேறாக இருந்தாலும் இந்தியா முழுதும் அதிர்ச்சியை உண்டாக்கிய அந்தச் செய்திகளின் பின்னணியில் இருக்கின்ற அரசியலை அம்பலப்படுத்த தலித் இயக்கங்கள் முயன்றபோது சனநாயகத்தின் மாயமுகத்தையும், விமர்ச்சனச் சுதந்திரம் என்ற தந்திரக்கோலையும் காட்டி இந்தச் சாதி இந்துச் சமூகம் அப்படியே திசைத் திருப்பிவிட்டது. பேசப்பட்டிருக்க வேண்டியப் பிரச்சினைகள் அப்படியே மூடி மறைக்கப் பட்டுவிட்டன. Continue reading