அவிழும் புதிர்கள்…!

wrapper

இந்திய வரலாற்றில் அவ்வளவாக அறியப்படாத ஒரு புதிர். ராசபுதனத்தை ஆண்ட ராசபுத்திரர்கள் எவ்வாறு திடீரென மறைந்துப் போனார்கள் என்பது. இந்து அரசாட்சியின் அத்தனை கோரங்களையும், மிகக்கொடுமையான சதி உள்ளிட்ட வழக்கங்களையும் கடுமையாகப் பின்பற்றிய ராசபுத்திரர்களின் திடீர் மறைவு வரலாற்று ஆசிரியர்களை அதிர்ச்சியுற வைத்துள்ளது. இதைப் பற்றி புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் கேள்வி எழுப்பினார். ராசபுத்திரர்களின் மறைவைப் பற்றி கவலைப்படும் வரலாற்றாய்வாளர்கள் தீண்டத்தகாத மக்களின் வரலாற்றைப் பற்றி எப்போதாவது கவலைப்பட்டதுண்டா என்று அவர் வினவினார். ஆனால் இதுவரை அதற்கு பதில் இல்லை. எனவே இது ஒரு புதிர் என்றாலும், பண்டிதரின் நூற்றாண்டு நினைவேந்தயை யொட்டி அவருக்கு குரு வணக்கம் மேற்கொள்ளும் இத்தருணத்தில் அதே கேள்வியை இப்போது கேட்கத் தோன்றுகிறது. Continue reading

Advertisements

தற்கால தமிழ் எழுத்துரு மாற்றத்தின் மூலவர்…

Thamizhmann May-2014 - Copy

 

 

 

 

பண்டிதர் அயோத்திதாசர்… தமிழ்மண் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு கட்டுரை.

சா.கௌதம சன்னா.

குறிப்பு கட்டுரையின் முதல் பக்கத்தின் இரண்டாம் வரிசையின் கீழே •எ வின் நெடிலுக்கு  எ என்றுதான் அன்றைக்கு எழுதினார்• , இதன் பொருள் என்ற நெடில் எழுத்தின் மீது புள்ளி வைத்து எழுதினார்கள் என்று மாற்றி படிக்க வேண்டும், அதேபோல நெடிலுக்கும் என்று இல்லாமல் வின் மீது புள்ளி வைத்து எழுதினார்கள். இந்த சிறு சேர்ப்புகள் அச்சில் வரவில்லை எனவே இக்குறிப்பை அடிப்படையாக வைத்துப் படிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

முழு கட்டுரைக்கு  சொடுக்குங்கள்..–  34 to 39 Pages

நம்மாழ்வாருக்கு வீரவணக்கம்

homage to Nammazhvaar

homage to Nammazhvaar

வேளாண் அறிவியலாளர் நம்மாழ்வார் இன்று நம்மோடு இல்லை என்பது வருத்தத்திற்குரியது. பரந்துப்பட்ட அளவில் இயற்கை வேளாண்மைக் குறித்த விழிப்புணர்வை அவர் உருவாக்கினார். அவரது சில கருத்துக்களோடு சமூகப் பார்வையின் அடிப்படையில் முரண்பாடுகள் இருந்தாலும் சமரசமின்றி தனது இறுதி காலம் வரை வாழ்ந்தார் என்பது மட்டுமல்ல வாழும் தலைமுறைக்கும் வருங்காலத் தலைமுறைக்கும் ஏராளமான எச்சரிக்கைகளை அவர் விட்டுச் சென்றுள்ளார்.

இயற்கை பற்றி மட்டுமல்ல மனித வாழ்வின் உன்னதங்களை இயற்கையை வெல்லும் பேராசையில் மனிதர்கள் சீரழித்ததின் மூலம் மீட்கமுடியாத அபாயத்தை அவர்கள் கட்டமைத்திருக்கிறார்கள் என்பதை அவர் சுட்டிக்காட்டினார். ஆனால் அவரின் எச்சரிக்கைகளை பொருட்படுத்தாததின் பதிலீட்டை அவர்கள் விரைவிலேயே பெறுவார்கள் என்பது அச்சமூட்டுகிறது.

ஒரு பெரியவர் இறந்துபோனால் ஒரு நூலகம் புதைக்கப்படுகிறது என்று ஓர் ஆப்பிரிக்க பழமொழி உண்டு அது நம்மாழ்வார் மறைவில் அப்படியே பொருந்தும். நம்மாழ்வாருக்கு எமது வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கௌதம சன்னா
கருத்தியல் பரப்புச் செயலாளர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி