விஸ்வரூபம் விகாரமாகக் கூடாது

kamal 2

நடிகர் கமல்ஹாசன் தற்போது நடக்கும் பரபரப்பான பிரச்சினையின் மையப்புள்ளியாகிவிட்டார். 90 கோடி ரூபாய் செலவில் அவர் எடுத்த விஸ்வரூபம் என்றத் திரைப்படம் பிரச்சினைக்கு மூலவேர். இந்த திரைப்படத்தை அவர் எடுத்தப் பிறகு அதன் மீதான விமர்ச்சனங்கள் வருவதற்கு பதில் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. எனினும் படத்தில் குரானையும் சில இடங்களில் இசலாமியர்களை மோசமாக சித்தரித்திருப்பதாக படத்தைப் பார்த்தவர்கள் சொன்னதின்பேரில் இசுலாமியர்களிடையே கோபம் எழத் தொடங்கியிருந்தது. இந்நிலையில்தான் படத்தை எதிர்க்க வேண்டும் என்று தேசிய லீக் கட்சியினர் ஏற்பாடு செய்திருந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் சார்பாக நான் கலந்துக் கொண்டேன். அதுவும் போராட்டத்தில் கலந்துக்கொண்ட இசுலாமியர் அல்லாத ஒரே நபர் நான்தான்.
Continue reading

Advertisements

குடியரசு நாளை புரட்சியாளர் அம்பேத்கருக்கும் அர்ப்பணிப்போம்

கதிரவன் ஒளி விழும் உலகின் நிலமனைத்தையும் ஒரு குடையின் கீழ் ஆண்ட பிரிட்டிஷ் பேரரசின் முடிவு 1947ஆம் ஆண்டு இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. பிறகு, தனது மாட்சிமையைக் காத்துக் கொள்ளவும் தனக்கென தனித்த அரசமைப்பு அடிப்படையிலான அரசை நிர்மாணித்துக் கொள்ளவும் கடுமையான நிர்பந்தத்தில் துணைக்கண்டம் அப்போது நின்றது. Continue reading

சேலம் வாழப்பாடியில் தலித்துகள் மீது தாக்குதல்

 சமரசம் கோரும் பாமக படைவீரர்கள்

சேலம் மாவட்டம், வாழப்பாடி நகரம் என்றமில்லாத அளவில் பதட்டத்தில் இன்று இருக்கிறது. கொள்ளிக்கட்டையை எடுத்து தலையை சொறிந்துக்கொண்டக் கதையாக பாட்டாளிச் சொந்தங்கள் பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

16.01.2013 அன்று இரவு சினிமா பார்க்க எல்லோரும் போயிருக்கிறார்கள். அதில் வன்னியர் தலித் என்ற பேதம் இல்லை. ஆனால் படம் பார்த்துவிட்டு வந்த சில தலித்துகளுக்கும் வன்னியர்களும் அற்ப காரணங்களுக்காக வாய்த்தகறாறு வந்திருக்கிறது. அது கைகலப்பாக மாறி வன்னியர்கள் தலித்துகளை கடுமையாக தாக்கியிருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட தலித்துகள் சிலபேரே இருந்ததால் அவர்களால் எதிர்த்துத் தாக்க முடியாமல் போய்விட்டது. Continue reading