டெல்லி முற்றுகை முடிவு பெறட்டும் இந்திய முற்றுகை தொடங்கட்டும்

டெல்லியில் பாலியல் கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த சகோதரிக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒப்பீட்டளவில் இந்தியாவில் உள்ள 53 பெரிய நகரங்களில் தலைநகர் டெல்லியில்தான் அதிகமான பாலியல் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. எனவே தோராயக் கணக்குப்படி நாளொன்றுக்கு சராசரியாக 13 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதாக அந்தப் புள்ளி விவரம் காட்டுகிறது. அதுவும் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையிலேயே இந்த விவரம் பெறப்பட்டுள்ளது, இந்த ஆண்டு டில்லியில் 4,489 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக புள்ளி விவரம் காட்டுகிறது. Continue reading

Advertisements

•கொலைகாரர்களின் கைகளில் வன்னியப் பெண்•

வடலூரில் பிரிக்கப்பட்டக் சாதி மறுப்புத் திருமணத் தம்பதி

தருமபுரியில் குச்சிக்கொளுத்தி வைத்தியர் ஏற்றி வைத்த தீ வட தமிழகத்தில் எரிந்துக் கொண்டிருப்பதை அணைக்க முடியாமல் அரசு வழக்கம்போல வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க, மனம் பதற வைக்கும் பாதகச் செயலை இன்று (28.12.2012) வடலூரில் அரங்கேற்றினார்கள் பாமகவின் முன்னணி நிர்வாகிகள். Continue reading

வெண்மணி – வீரவணக்கம்

சீறியக் கள்ளத் துவக்குகளின் குண்டுகள்
துரத்திவந்த சாதிவெறிக் குண்டர்கள்
வேடிக்கைப் பார்த்த கையாலாகா காவலர்கள்..

அரைபடி நெல்லை கூலியாய் கேட்டதற்கு
மரணத்தை அளந்து த்தர
அடியாள் பட்டாளத்தை ஏவியக் குருரம்..

வர்க்கமும் சாதியும் இணைந்துக் தாக்கிய வன்மம்.
ஆயுதம் அற்ற கைகளை போருக்கு அனுப்பிய வீரம்
எல்லாம் சேர்ந்தன கீழ்வெண்மணிச் சேரியில்..

ரோமக் கொடியோர் பூட்டியத் தளையை
சுமந்து தவித்த யூதக் குலத்தினை மீட்க
உதித்த மைந்தன் பிறந்த நாளில்

மீட்க வகையற்ற வேதனைகள் சூழ
மீறும் தீ நாவுகள் பற்ற வெந்து மடிந்தனர்
மண்ணின் மைந்தர்கள் மானம் காத்து..

வெண்மணி சாம்பலில்
உயிர்த்து வாழும் வீரர்களுக்கு
வீர வணக்கம்

/ சன்னா/25.12.2012