சொந்த உழைப்பில் தேர்தலை எதிர்கொள்வோம்.

அன்பார்ந்தத் தோழர்களே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய பணிவான வணக்கத்தினைப் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாம் அரசியல் களத்திலே நின்றுக்கொண்டு மற்ற அரசியல் கட்சிகளோடு இந்த 2011ஆம் ஆண்டுத் தேர்தலை எதிர்கொள்ளப் போகிறோம். நீங்கள் அனைவரும் சொன்னபடி நமக்கு இந்த தேர்தல் புதிதுதான் ஆனால் இதைச் சொல்லி கடந்த கடந்தத் தேர்தல் உட்பட மூன்று தேர்தகளை எதிர்கொண்டுவிட்டோம், இனியும் நமக்கு தேர்தலை எப்படி எதிர்கொள்வது எப்படி என்பதைப் பற்றி எதுவும் தெரியாது என்று தப்ப முடியாது. நீங்கள் சிந்தித்து திறம்பட பணிகளை மேற்கொண்டால் மட்டும்தான் மற்ற அரசியல் கட்சியின் தலைவர்களும் பொதுமக்களும் நாம் யார் என்ற புரிதலை தெரிந்துக் கொள்வார்கள்,

ஆக தோழர்களே இனியும் மற்ற அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்பு பணத்துக்கோ «ல்லது மற்ற பிறத் தேவைகளுக்கோ நிற்க வேண்டாம். நீங்கள் சிந்தித்துப் பாருங்கள் இந்த திருவள்ளூர் மாவட்டத்தில் பெரும்பாலும் தலித் இயக்கங்களும் அல்லது பெரிய அரசியல் கட்சிகளும் அவற்றின் செல்வாக்கும் அதிகம் இருக்கின்றன, அப்படி இருந்தாலும் நாம் மேற்கொண்ட உறுப்பினர் இயக்கதின் மூலம் நமக்கான மக்களை நாம் ஒருங்கிணைத்திருக்கிறோம், அந்த அனுபவங்களை நல்ல முறையில் நாம் பயன்படுத்திக் கொண்டு பணியாற்றினால் நமக்கான தேவைகளை நாம் பெற்றுக் கொள்ளலாம்.

இந்தத் தேர்தல் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் சவாலாக உள்ள ஒரு சவாலாக உள்ளத் தேர்தல் திமுக, அதிமுக, தேமுதிக, காங்கிரஸ், பாமக மற்றும் இதரக் கட்சிகள் இருக்கின்றன, இந்தக் கட்சிகள் அனைத்துமே அதிகாரத்திற்கு வரவேண்டும் என்று மிகக் கடுமையாக இந்தத் தேர்தலை எதிர் கொள்வார்கள் இவற்றுக்கு இடையே நாம் எவ்வாறு பணியாற்ற போகிறோம் என்ற எண்ணம் நம்மை மிகவும் யோசிக்க வைக்கிறது.

நான் சமீபத்தில் ஒரு காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொருப்பளர் ஒருவரைப் பார்த்து பேசிக்கொண்டிருந்தேன், தேர்தலைப் பற்றி அவரிடத்தில் உரையாடும்போது சில விவரங்களைப் புரிந்துக் கொள்ள முடிந்தது. தேர்தலைப் பற்றி அவர்கள் கட்சி போட்டிருக்கிற சில புள்ளி விவரக் கணக்குகளை, வாக்கு வங்கி விவரத்தை என்னிடத்தில் அவர் விவரித்தார், எல்லாவற்றையும் கேட்டுவிட்டு நான் நம்முடைய நிலையைப் பற்றி அவரிடத்தில் விவரித்தேன் அனைத்தையும் கேட்ட அவர் ஆச்சர்யப்பட்டதுடன் நீங்கள்தான் சரியான வாக்கு வங்கி என்று கூறினார். அப்போது எனக்குப் புரிந்தது என்னவென்றால் வளர்ந்தக் கட்சிகள் யோசிக்கும் முறையின் அடிப்படைகளைக்கூட நாம் அடையவில்லை என்று தெரிந்துக் கொண்டேன். உதாரணத்திற்கு ஒன்று சொல்ல வேண்டுமென்றால் ஒரு ஒன்றியத்தில் 100 குடும்பத்திலிருந்து 100 பேரை கட்சியில் சேர்த்திருக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம் அந்த 100 பேரின் குடும்பத்திலும் தலா மூன்று அல்லது நான்கு பேர் உள்ளக் குடும்பமாக இருந்தால் நூறு என்பது நானூறாக மாறுகிறது என்று அவர்கள் யோசிக்கிறார்கள். அதன் அடிப்படையில் அவர்கள் தேர்தல் வியூகங்களை வகுத்துக்கொள்கிறார்கள். பரந்துப்பட்ட அளவில் உள்ளக் கட்சிக்கு அப்படி ஒரு யோசனை வருவது இயல்புதான், நமக்கு இன்னும் தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை அப்படியிருக்க நாம் எப்படி வரும் தேர்தலை எதிர்கொள்வோம் என்ற கேள்வி எழலாம், ஆனால் நாம் ஒவ்வொரு அடியும் நிதானமாக மற்றக் கட்சியினர் வியக்கும் வகையில்தான் இருக்கவேண்டும், நாம் உறுப்பினர் சேர்க்கையின்போது எவ்வாறு பணியாற்றினோமோ அந்த அடிப்படைகளைப் பின்பற்றி உறுதியோடு பணியாற்ற வேண்டும். அப்படி பணியாற்றும்போது நாம் குழுக்களை அமைத்துவிடலாம். இவற்றையெல்லாம் பின்பு நமது தலைவர் அவர்கள் அறிவிப்பார்கள். பிறகு மிகுந்த ஆற்றலோடும் துணிச்சலோடும் பணியாற்றிட நீங்கள் முயல வேண்டும்.

பெரிய அரசியல் கட்சிகள் எதிர்கொள்கின்ற மாதிரி நாம் இந்தத் தேர்தலை எதிர்கொள்ளக் கூடாது. அவர்களுக்கு இடையே நாம் செய்யும் தேர்தல் பணியானது அவர்களை மிஞ்சும் வகையில் இருக்க வேண்டும். மற்ற அரசியல் கட்சிக்காரர்கள் நம்மிடம் கற்றுக் கொள்ளும் வகையில் இருக்க வேண்டும். இதற்காக உங்களின் முழுமையான ஆற்றலையும் அறிவையும் பயன்படுத்தி தேர்தலை சந்திக்க முயற்சிக்க வேண்டும், உறுதியாகச் செயல்பட வேண்டும் என்று உங்களை வாழ்த்தி விடைபெருகிறேன், நன்றி, வணக்கம்.

(திருவள்ளூர் மாவட்டம் 2011 தேர்தல் களத்தில் கட்சித் தோழர்களிடத்தில் ஆற்றிய சிற்றுரை, தொகுப்பு க.உதயகுமார் )

Advertisements

உங்கள் விமர்ச்சனம்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s